• Apr 17 2026

18 ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டாருடன் இணையும் த்ரிஷா .. வைரல் வீடியோ

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

 18 ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டார் உடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய் நடித்த ’லியோ’, அஜித் நடித்த நடித்து வரும்  ’விடாமுயற்சி’, கமல்ஹாசன் நடித்துவரும் ’தக்லைஃப்’, மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ மற்றும் நிவின் பாலி நடித்து வரும் ’ ஐடென்டிட்டி’ ஆகிய படங்களில் தற்போது த்ரிஷா நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி சல்மான் கான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகியாக த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிரஞ்சீவி வீடியோவுடன் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.  யுவி  கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 வருடங்களுக்கு முன் அதாவது கடந்த 2006ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின்’ என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்து இருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement