• Mar 22 2025

மீண்டும் இணைந்த "எம். குமரன் S/O மகாலட்சுமி" குடும்பம்...! எதற்காக தெரியுமா?

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

2004ம் ஆண்டு தமிழ் சினிமாவில் உணர்ச்சி பெருகும் குடும்பக் கதையை மையமாகக் கொண்டு ஒரு சிறந்த வெற்றிப் படமாக உருவெடுத்தது 'எம். குமரன் S/O மகாலட்சுமி'. இயக்குநர் மோகன் ராஜாவின் கதை, நடிகர் ஜெயம் ரவி,அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்டோரின் பங்களிப்பு ஆகியவை இப்படத்தை ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கச் செய்தன.

இப்படம் மொத்தமாக ஒரு குடும்பத்தின் உணர்வுகள், தாய் மகனின் அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கையின் போராட்டங்களை அழுத்தமாக வெளிப்படுத்தியது. இத்திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் தங்களது கண்களில் கண்ணீர் விட்டார்கள். குறிப்பாக நதியாவின் கதாபாத்திரமான மகாலட்சுமி என்ற தியாகத் தாயின் உருவாக்கம்  பெரும் வரவேற்பைப் பெற்றது.


2024ம் ஆண்டு, இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றது. இதனை சிறப்பிக்கும் வகையில், தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மார்ச் 14ம் திகதி திரையரங்குகளில் படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர்.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைப் பார்த்த பலரும் பழைய நாட்களை நினைவு கூர்ந்து காணப்பட்டது எனச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராமில் இயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement