• Jan 19 2025

நான் மாறிவிட்டேனா? கிளர்ந்தெழுந்த சாய் பல்லவி; பொய்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்து வருகின்றார் சாய்பல்லவி. இதற்காக அவர் சைவ உணவுகளை மட்டுமே உண்பதாகவும் தான் செல்லும் பட ஷுட்டிங்கிற்கு எல்லாம் சமையற்காரர்களை அழைத்துக் கொண்டு செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி ‘ராமாயணா’ படத்திற்காக அசைவ உணவுகளை கைவிட்டதாக வெளியான செய்திகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வதந்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

d_i_a

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெரும்பாலான சமயங்களில், அடிப்படை அற்ற வதந்திகள் தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதை காணும் போது நான் அமைதியாக இருப்பதையே தெரிவு செய்கின்றேன். ஆனால் அது தொடரும் போது நான் எதிர்வினை ஆற்ற வேண்டிய நேரம் இது.


குறிப்பாக எனது படங்கள் தொடர்பான அப்டேட்டுகள், எனது கேரியரின் முக்கியமான தருணங்களில் அடுத்த முறை எந்த ஒரு புகழ்பெற்ற செய்தி ஊடகமோ, தனி நபரோ அல்லது கிசுகிசு என்ற பெயரில் கேவலமான கதைகளை சொல்வதை எல்லாம் நான் அறிந்தால் நீங்கள் என்னிடம் இருந்து சட்டப்படி நடவடிக்கை என்ற தகவலை கேட்பீர்கள் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாய்பல்லவி வெளியிட்ட எச்சரிக்கை பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆனாலும் இதன் மூலம் இனிவரும் நாட்களில் எந்த ஒரு ஊடகமோ,  தனிநபரோ தவறாக கிசு கிசு தகவலை எழுதும்போது சாய் பல்லவி  விடுத்த எச்சரிக்கை நினைவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement