• Jan 19 2025

மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட திருமண போட்டோஸ் இதோ..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலன் ஆன ஆண்டனியை இன்றைய தினம் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் கோவாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு உள்ளார்கள்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு பிரபலங்களும் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களை மனப் பூர்வமாக தெரிவித்து வருகின்றார்கள்.

d_i_a

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் ரொம்ப சீக்ரெட் ஆகவே கோவாவில் நடைபெற்றுள்ளது. இவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மெஹந்தி பங்க்ஷன், சங்கீத், ஹால்தி என எந்த ஒரு புகைப்படமும் இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


மேலும் கீர்த்தி சுரேஷின் கணவரான ஆண்டனி துபாய், சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் நடத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல் அவருக்கு வேறு சில தொழில்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.

எனினும் தற்போது திருமணத்தில் இணைந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இனிவரும் நாட்களில் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? இல்லை குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி விடுவாரா? என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

Advertisement

Advertisement