• Jan 18 2025

கீர்த்தி சுரேஷ் வெட்டிங்...! மாஸ் என்றி கொடுத்த தளபதி விஜய்...! வைரல் கிளிக் இதோ...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில் திருமணம் இன்று வெகு விமர்சையாக கோவாவில் நடைபெற்றது. அழகிய பாரம்பரிய முறையில் நடந்த இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சூப்பரான லுக்கில் நடிகர் தளபதி விஜய் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. 


சினிமா துறையில் முன்னணியில் இருப்பவர்நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை மணக்க போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அந்த காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்ததினால் மதம் ஒரு பிரச்சனை இல்லை என்று திருமணத்திற்கு முடிவு செய்ததாகவும் கூறியிருந்தார்.


இன்று டிசம்பர் 12ம் தேதி அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்றே கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனிக்கும் கோவாவில் வைத்து மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் கீர்த்தியின் திருமணத்திற்கு வந்திருந்த நிலையில் tvk தலைவர் விஜய் அவர்களும் வேட்டி சட்டை அணிந்து மாஸான லுக்கில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement