தென்னிந்திய திரை உலகை பொருத்தவரை 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிக குறைந்த படங்களே இந்த சாதனையை செய்துள்ள நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் இன்னொரு படமும் 1000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தென்னிந்திய திரை உலகை பொருத்தவரை 'பாகுபலி 2’ ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ’கேஜிஎப் 2’ ஆகிய படங்கள் மட்டுமே 1000 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் 700 கோடியும் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் 500 கோடியும் வசூல் செய்துள்ளது என்றாலும் 1000 கோடியை தமிழ் திரைப்படங்கள் இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ’புஷ்பா 2’ படத்தின் பிசினஸை பார்க்கும் போது இந்த படம் நிச்சயம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் 370 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் ’புஷ்பா 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதும் அது மட்டும் இன்றி இந்த படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருப்பதால் 1000 கோடியை மிக எளிதாக தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. 
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு ,பிரகாஷ் ராஜ் ,சுனில், உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் முதல் பாகத்தை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!