இளையதளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருவதாகவும், இதன் டப்பிங் பணிகள் பாதி அளவில்நிறைவடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருந்தன.
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக காணப்பட்டது. அது வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு விஜய் ஒப்பந்தமானர்.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் விஜயுடன் இணைந்து பிரபு தேவா, பிரசாந்த், லைலா, ஸ்நேகா, மைத் மோகன் என பல முன்னணி நடிகர்களும் நடிப்பதற்கு கம்மிட் ஆகியுள்ளார்கள். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் பணிகள் 60% நிறைவுற்ற நிலையில், விரைவில் கோட் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்கூட்டியே சரியான திட்டமிடல்களோடு நடக்கும் என்றும், மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய இரண்டில் ஒரு நாட்டில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!