• Dec 29 2024

அல்லு அர்ஜுனும் வில்லு விஜயும் தலைமறைவு.? காரணங்களை புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தமிழில் வெளியாகும் படங்களை மட்டும் இல்லாமல் அரசியல் தலைமைகள், நடிகர்கள், இயக்குனர் என அனைத்து தரப்பினரையும் வம்பு இழுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு விமர்சனம் பண்ணுவதில் ப்ளூ சட்டை மாறன் வல்லவராக காணப்படுகிறார். இவரது விமர்சனத்திற்காகவே பலர் காத்திருப்பார்கள். அத்துடன் இவர் சொல்லும் விமர்சனத்தின் காரணமாகவே பல படங்கள் ட்ரோலுக்கு உள்ளாகி வருவதும் உண்டு.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுனும், வில்லு விஜயும் என கேப்ஷன் போட்டு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.. 

d_i_a

அதில் அவர் அல்லு அர்ஜுன்  தான் நடித்த படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் சென்று பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக வெளியில் வராமல் இருக்கின்றார்.


அதேபோல  தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவரான விஜயையும் வெளியில் வராமல் இருப்பதற்கு காரணம் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதற்காகத்தான் என்று ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், அதற்கு தனது விளக்கத்தை கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


அதன்படி அவர் கூறுகையில், புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த  அல்லு அர்ஜுன் குறித்த பெண் உயிரிழந்த பிறகும் பால்கனியின் இருந்து படம் பார்த்துள்ளார். காவலர்கள் வெளியே  போக சொன்ன போதும் படம் முடிந்த பின்பே காரின் ரூஃப் டாப்பில் நின்று சீன் போட்டுள்ளார். இதற்கு புஷ்பா 2 சம்பவத்தை காரணமாக சொல்வது வீண்.


மேலும் அல்லு அர்ஜுனுக்கு இருப்பது வெறும் ரசிகர்கள் மட்டும்.. ஆனால் விஜய்க்கு ரசிகனை விட தொண்டனுக்கான பொறுப்பு அதிகம். தலைவர் நேரில் வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பங்கு தொண்டர்களுக்கு உண்டு.

தலைவனை கண்டால் பாய்ந்து ஓடுவோம்.. சிலரை தள்ளுவோம்.. மிதிப்போம்.. பிரச்சனை வரும்.. இதனால் தான் தலைவர் வெளியே வருவதில்லை என்று சொன்னால் நீங்கள் அரசியல் செய்யும் வயதுக்கு வரவில்லை என்று தான் அர்த்தம். 

எனவே எல்லா சவாலையும் சந்திக்க தயாரா இருந்தா அரசியலுக்கு வா... தலைவனா இரு... தொண்டனா இரு.. அப்படி இல்லை என்றால் படத்துல மட்டும் பஞ்ச் பேசட்டும்... நீங்க விசில் அடிங்க.. அது போதும் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement