தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக காணப்படுபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார். மேலும் அட்லி தயாரிப்பில் உருவான பேபி ஜான் படத்தின் மூலம் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் காதலித்த ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். இதனால் கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான தொழிலதிபர் ஆண்டனியை 15 வருடமாக காதலித்துவந்த நிலையில், பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் இந்து முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற்றது.
இதை அடுத்து பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். மேலும் கடந்த 25 ஆம் தேதி இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது கீர்த்தி சுரேஷ் 'ரிவால்வர் ரீட்டா', 'கண்ணி வெடி' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறான நிலையில் கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும் இது தொடர்பில் கீர்த்தி சுரேஷ் தனது தரப்பிலிருந்து உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!