பிரபல நடிகர் பிரேம்ஜிக்கு சமீபத்தில் இந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இந்து என்னுடைய திருமணத்தில் தம்பி இல்லை அதுதான் வருத்தமாக இருக்கு என்று கவலையுடன் கூறியுள்ளார்.
நடிகர் பிரேம்ஜியை திருமணம் செய்துகொண்ட பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோக்களை அவ்வப்போது ஷேர் செய்து வருவார் பிரேம்ஜி. இப்படி இருக்க மனைவி இந்து சமீபத்திய பேட்டியில் தன்னுடைய தம்பி குறித்து பேசியுள்ளார். "என்னுடைய தம்பிக்கு இந்த திருமணம் புடிக்கவில்லை, அதனால எங்களோட திருமணத்துக்கு கூட அவன் வரவில்லை. நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன் அவன் கேக்குறமாதிரி தெரியவில்லை. பிரேம்ஜியை காதலிப்பது தெரிந்த நாளில் இருந்து இப்போது வரைக்கும் என்னோட பேசுறது இல்லை" என்று கூறினார்.
மேலும் " பிரேம்ஜி அவன்கூட பேசிபாத்தாரு ஆனா அவனுக்கு புரியவில்லை, இப்பதான் காலேஜ் படிக்கிறான் போக போக புரிஞ்சிப்பானு நினைக்கிறேன். ஆரம்பத்துல நண்பர்களா பழகி அப்புறம் தான் லவ் பண்ணுனோம் என்னோட அப்பா இறந்துட்டாரு அடுத்த மாசம் அவருடைய அம்மா இறந்துட்டாங்க சோ ரெண்டு பேருக்குமே எமோஷனலான சப்போட் இருந்தது அப்படித்தான் நாங்க வெட்டிங் பண்ணிக்கொண்டும். தம்பி இத புரிஞ்சிக்கவில்லை அவனா ஓகேயாகி வருவான் என்று விட்டுவிட்டோம் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
Listen News!