சன் டீவியில் பிரபலமான நடிகை ஆலியா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ், சமீபத்தில் தங்களின் மிகவும் அழகான பாரம்பரிய உடை அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தொலைக்காட்சி உலகில் ரசிகர்கள் அதிகமாக நேசிக்கும் ஜோடிகளில் ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடி முன்னணியில் உள்ளனர். பிரபலமான ராஜா ராணி தொடர் மூலம் காதலிக்கத் தொடங்கிய இவர்களின் வாழ்க்கை திருமணத்தால் அழகாக மாறியது. இவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர், இதனால் பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகையாக காணப்படுகின்றார்.
சமீபத்தில் ஆலியா மற்றும் சஞ்சீவ் பாரம்பரிய உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “பாரம்பரிய உடைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செம்ம அழகா இருக்கிறார்கள்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் ஆலியா மற்றும் சஞ்சீவ் தமிழர் பாரம்பரிய அழகை வெளிப்படுத்தும் விதமாக இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அழகான புகைப்படங்கள், ஆலியா மற்றும் சஞ்சீவின் காதல் நிறைந்த வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இவர்கள் திருமணத்திற்குப் பிறகு வெளியிடும் அனைத்துப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாகவே உள்ளது.
Listen News!