விஜய் சேதுபதி ஆரம்பத்தில் கணக்காளராகவே தனது வாழ்க்கை ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு தொலைக்காட்சி குறும்படங்களிலும் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் உடன் நடித்த குறும்படங்களில் சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ் திரைப்பட விழாவில் பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்களில் வேறுபட்ட கேரக்டரில் நடித்து வெற்றி பெற்றார்.
இவ்வாறு படிப்படியாக முன்னேறிய விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் நடிக்கும் பிரபல நடிகராக காணப்படுகின்றார். மேலும் சினிமாவில் மட்டுமில்லாமல் விளம்பரங்கள், பிக் பாஸ் நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
d_i_a
இந்த நிலையில், விஜய் சேதுபதி சமீபத்தில் வழங்கிய ஒன்றில் தான் சரக்கு அடித்து விட்டு அப்பாவுக்கு முன்னாடியே வந்து நிற்பேன் என பேசிய கருத்தை வைத்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனது பேட்டியில் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அதாவது விஜய் சேதுபதி பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில் சில தத்துவ கருத்துக்களை பதிவிடுவார். அதன்படி தான் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த போது தனது அப்பா முன்னாடியே சரக்கு அடித்து விட்டு போய் நின்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டிய சேகுவாரா கிராமத்தில் உள்ள சில பழக்க வழக்கங்கள் மாற வேண்டும். விஜய் சேதுபதி அப்பாவுடன் சேர்ந்து சரக்கு அடிப்பேன் என மேடையில் தத்துவம் பேசலாமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Listen News!