• Jul 16 2025

அஜித் முடிவை மாற்றியதால் மாற்றி யோசித்த ரஜினி.. சூர்யாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்கும் வரும் ’விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஜினியும் தனது ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சூர்யாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ரஜினியின் ’வேட்டையன்’ மற்றும் சூர்யாவின் ’கங்குவா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானால் இரண்டு படங்களுக்கும் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஏதாவது ஒரு படம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது உள்ள நிலைமையில் அஜித்தின் ’விடாமுயற்சி’ படம் தீபாவளிக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் அந்த படம் சில மாதங்கள் தள்ளி போகலாம் என்றும் அனேகமாக கிறிஸ்துமஸ் தினத்திற்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.



இந்த நிலையில் தீபாவளிக்கு அஜித் படம் விலகி விட்டதை அடுத்து ரஜினி தன்னுடைய ’வேட்டையன்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்றும் ’கங்குவா’ உடன் மோத வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே அஜித்தின் ’விடாமுயற்சி’ தள்ளி வைக்கப்படுவதன் காரணமாக ரஜினியும் மாற்றி யோசித்து ’வேட்டையன்’ படத்தை தீபாவளிக்கு கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டால் அக்டோபர் 10ஆம் தேதி சோலோவாக ரிலீஸ் ஆகும் சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு ஜாக்பாட் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement