விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ’எல்ஐ’சி படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நடந்த நிலையில் தற்போது இந்த படம் டிராப் என கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உட்பட பலர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’. இந்த படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்திருந்த நிலையில் கிட்டத்தட்ட பாதி படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அஜித்தின் 62 வது படம் டிராப்பானதற்கு நயன்தாரா தான் காரணம் என்றும் திருமணம், ஹனிமூன் என்ற வகையில் விக்னேஷ் சிவன் சுற்றிக் கொண்டிருந்த நிலையில் ’அஜித் 62’ படத்தின் படப்பிடிப்பை அவர் கவனிக்கவில்லை என்பதால் தான் அவர் மாற்றப்பட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போதும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் பல வெளிநாடுகளுக்கு சுற்றிக் கொண்டிருப்பதால் தான் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானதாகவும் அதனால்தான் இந்த படமும் டிராப் என்று கூறப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’எல்ஐசி’ படம் ராப் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் சில மாதங்களுக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறி வருகிறது
நடிகை நயன்தாராவை  இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்த நிலையில் அதன் பின் இந்த இரண்டு வருடங்களில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் கூட வரவில்லை என்பதும் திருமணத்திற்கு முன்பு அவர் இயக்கிய ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படம் தான் அவரது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!