மகிழ் திருமேனி - அஜித் குமார் கூட்டணியில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் இந்த படத்தின் வசூல் கிட்டத்தட்ட 180 கோடிகளை கடந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அஜித்குமாரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அஜித் நம்பவே முடியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து ரொம்பவும் ஸ்லிம் ஆக காணப்படுகின்றார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு அஜித் ரசிகர்களை வேதனைக்கு உட்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதென ஏற்கனவே தகவல்கள் கசிந்து இருந்தன. அதன்படி பெப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த திரைப்படத்திற்காக அஜித் சுமார் எட்டு கிலோ வரை தனது உடலை குறைத்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான புகைப்படத்திலும் அஜித் இளமையான தோற்றத்தில் உடல் மெலிந்து காணப்படுகின்றார்.
மேலும் தற்போது பார்சிலோனாவில் அஜித் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் உள்ளார் எனவும், அதற்காகவே தனது உடல் எடையை கட்டுப்படுத்தி ஸ்லிம் ஆகியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!