• Jan 18 2025

ராம்சரணும் காலியா? ’இந்தியன் 2’ தோல்வியால் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு சிக்கல்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உருவான கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி படத்தின் வசூலும் சரிந்துள்ள நிலையில் அவரது அடுத்த படமான ’கேம் சேஞ்சர்’ படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ படத்தை ஏற்கனவே பார்த்த கமல்ஹாசன் படம் நீளமாக இருக்கிறது, படத்தின் நீளத்தை குறைக்க சொல்லுங்கள் என்று லைகாவிடம் சொன்னதாகவும் ஆனால் ஷங்கர் பிடிவாதமாக நீளத்தை குறைக்க முடியாது என்று கூறிய நிலையில் தற்போது வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் லைகா தரப்பு ஷங்கர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ தோல்வி காரணமாக ’கேம் சேஞ்சர்’படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்து கொண்டிருப்பதாகவும் கமல்ஹாசனை அடுத்து ராம்சரணையும் ஷங்கர் காலி செய்துவிடுவார் என்று ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூ, ஷங்கரை அழைத்து இதுவரை எடுத்த படத்தை என்னிடம் போட்டு காட்டுங்கள், அதில் ஏதேனும் கரெக்ஷன் செய்ய வேண்டி இருந்தால் கரெக்ஷன் செய்வோம், மேலும் படம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ரன்னிங் டைம் இருக்கக்கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகள் விதித்திருப்பதாகவும், வேறு வழியின்றி ஷங்கர் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் புறப்படுகிறது.

மொத்தத்தில் ஷங்கரின் திரையுலக வாழ்வு 'கேம் சேஞ்சர்’ வெற்றியில் தான் உள்ளது என்றும் ஒருவேளை ’கேம் சேஞ்சர்’ தோல்வி அடைந்தால் அவரது திரை உலக வாழ்க்கை முடிவுக்குவ் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement