• Jan 19 2025

பாஜகவில் சேரும் கமல், ரஜினி பட நடிகை.. போட்டியிடும் தொகுதியும் முடிவு செஞ்சாச்சு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், போட்டியிடும் தொகுதி கூட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்தஎனக்குள் ஒருவன்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தசிவாமற்றும்தளபதிஉள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை ஷோபனா. இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினர் என்பதும் கடந்த சில நாட்களாக இவர் அரசியல் கட்சியின் மேடைகளில் தோன்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது மேடையில் ஷோபனாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஷோபனா பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் திருவனந்தபுரம் தொகுதியில்  போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.



 
திருவனந்தபுரம் தொகுதியை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது என்பதும் இந்த தொகுதியில் இருந்து தான் தொடர்ச்சியாக மூன்று முறை  சசிதரூர்   என்பவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் சசிதரூர் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் அவரை எதிர்க்க சரியான போட்டியாளர் ஷோபனா தான் என பாஜக மேலிடம் முடிவு செய்து இருப்பதாகவும் எனவே அவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஷோபனா தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement