• Apr 17 2026

வாய துறந்து ஒரு வார்த்த சொல்லாத... கோபியை காரி துப்பிய ராதிகா! பாக்கியாவின் நெக்ஸ்ட் மூவ்மெண்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகா கோபியின் பூட்டிய ஆஃபீஸ்ல் இருந்து போன் பண்ணி எங்க இருக்கீங்க என கேட்க, தான் ஆஃபீஸ்ல் இருப்பதாக பொய் சொல்லி மாட்டிக் கொள்கிறார். 

இதையடுத்து, அங்கு வந்த கோபியை லெப்ட் அன்ட் ரெயிட் வாங்குகிறார் ராதிகா. மேலும், நீங்க சரியான பொய் காரன், உங்கள நம்பினது என் தப்பு தான் என கண்டபடி திட்டுகிறார்.


இன்னொரு பக்கம் பாக்கியா புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் இடத்திற்கு சென்று எல்லாம் சரியா இருக்கா என குடும்பத்தாருடன் செக் பண்ணுகிறார். மேலும் அதன் திறப்பு விழாவிற்கு மினிஸ்டரை அழைக்க, அவரும் கட்டாயம் வருவதாக வாக்கு கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வரும் போதே கோபியும் ராதிகாவும் சண்டை போட்டுக் கொண்டு வர, எல்லாரும் அதை பார்க்கிறார்கள். மேலும், ஈஸ்வரி கோபியை அழைத்து என்ன பிரச்சினை என்று கேட்க, அது சின்ன பிரச்சனை என்று சமாளிக்கிறார்.

இதைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, இது சின்ன பிரச்சினையா என்று கேட்க, சொல்ல வேண்டாம் என கெஞ்சுகிறார் கோபி. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement