• Jan 19 2025

‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. 3 வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தார்?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

மஞ்சும்மெல் பாய்ஸ்’  என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரம் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியானமஞ்சும்மெல் பாய்ஸ்என்ற திரைப்படம் தமிழகத்திலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் நேற்றுஜெ பேபிஉள்பட  சில தமிழ் திரைப்படங்கள் வெளியான போதிலும் இன்னும்மஞ்சும்மெல் பாய்ஸ்’  படத்திற்கு தான் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்மஞ்சும்மெல் பாய்ஸ்இயக்குனர் சிதம்பரம் மீது திடீரென நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்ரீப்தி எலிசபெத்  என்ற நடிகை இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார் என்பதும் அவர் இயக்குனர் சிதம்பரம் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் களை ஆதாரமாக வைத்துள்ளதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.



இயக்குனர் சிதம்பரம் இயக்கிய முதல் படமான ’Jan.E.Man’ என்ற படத்தில் நடிகை ப்ரீப்தி எலிசபெத் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் தனக்கு இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டு நிகழ்ந்த குற்றத்தை இதுவரை சொல்லாமல் இப்போது ஏன் வெளியே சொல்கிறீர்கள் என்றும்மஞ்சும்மெல் பாய்ஸ்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் வரை அமைதியாக இருந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு இளைஞர் கஷ்டப்பட்டு ஒரு துறையில் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய வெற்றியை அவமதிக்கும் வகையில் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது தவறான முன்னுதாரணம் என்றும் பலர் அந்த நடிகைக்கு கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement