• Dec 03 2024

தனுஷின் ‘குபேரா’ படத்தின் கதை இதுவா? இதுவும் காப்பி தானா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


தனுஷ் நடித்து வரும்குபேராபடத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது லீக் ஆகி உள்ளது.


தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்குபேரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்போது லீக் ஆகி உள்ளது. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ ஒரு மிகப்பெரிய பணக்காரர் என்றும் குபேரனுக்கு நிகராக அவரிடம் செல்வம் இருந்தது என்றும் ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் ஏழையாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அப்போது அவர் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இது போன்ற கதை தான் விஜய் ஆண்டனி நடித்தபிச்சைக்காரன்என்று திரைப்படம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட அதே கதைதான் காப்பி அடித்துகுபேராபடம் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இந்த படத்தின் கதை இதுதான் என்பதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷுக்கு நிகரான கேரக்டர் நாகார்ஜுனாவுக்கு உண்டு என்றும் அதேபோல் வெறும் பாடலுக்கு நடனமாடும் நாயகியாக இல்லாமல் ராஷ்மிகா மந்தனாவுக்கு அழுத்தமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement