• Jan 18 2025

46 வயதில் பிகினி போட்டோஷூட்.. மாளவிகாவின் மயக்கும் மாலத்தீவு புகைப்படங்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகாவுக்கு தற்போது 46 வயதாகும் நிலையில் நீச்சல் குள போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகில் சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன்பிறகு மீண்டும் அஜித்துடன் ’ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்த மாளவிகா, ’ரோஜாவனம்’ ’வெற்றி கொடி கட்டு’ ’பேரழகன்’ ’ஐயா’ ’சந்திரமுகி’ உள்பட பல தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் பெரும்பாலும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்த நிலையில் 2009 ஆம் ஆண்டு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகை மாளவிகா கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். இதில் அவர் பல கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் மாலத்தீவில் உள்ள கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான இடத்திற்கு சென்று உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த  புகைப்படத்திற்கு இதே போன்ற புகைப்படத்தை அடிக்கடி பதிவு செய்யுங்கள் என்பது போன்ற ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement