• Jan 18 2025

இப்ப தாண்டி நீ கரெக்டா சொல்ற.. தங்கமயிலை பாராட்டும் பாக்கியம்.. செந்தில் - கதிர் இடையே டீல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை அவமானப்படுத்தி அவருடைய அப்பா வெளியே போ என்று விரட்டுகிறார். இங்கே வந்தது என்னுடைய தவறுதான், உங்களுக்கு வாழ்த்து சொல்லலாம் என்று வந்தேன் என்று கூறி மீனா அழுதவாறு செல்ல செந்தில் அவருக்கு ஆறுதல் கூறுகிறார். உன் அப்பா எப்போதுதான் திருந்துவரோ தெரியவில்லை என்று அவர் ஆதங்கத்துடன் கூறுகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் - கோமதி வீட்டுக்கு வரும் பாக்கியம், தங்க மயிலை பார்த்து நடந்தது என்ன என்று கேட்கிறார். ஹனிமூன் கூட்டி சென்றால் தான் நீங்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை நம்புவேன் என்று தன்னுடைய கணவரிடம் சொன்னதாக தங்கமயில் கூற, அதை கேட்டு பாக்கியம் ’இப்பதாண்டி நீ கரெக்டா சொல்ற, இந்த ஹனிமூன் சான்சை விட்டு விடாதே, ஹனிமூன் போயிட்டு திரும்பி வரும்போது உன் புருஷனின் குடுமி உன் கையில் இருக்க வேண்டும், இந்த பொம்மலாட்டத்தில் இருக்கும் நூல் ஒருவர் கையில் இருப்பது போல் இந்த குடும்பமே உன்னுடைய கையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை அடுத்து பாண்டியன் - கோமதி இடம் பேசும் பாக்கியம், இருவரையும் ஹனிமூன் அனுப்பி வையுங்கள் என்று கூறுகிறார். அதற்கு பாண்டியனும் ஓகே சொல்கிறார்.



இந்த நிலையில் செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் பேசிக் கொண்டு வரும் நிலையில் மீனாவின் அப்பா வீட்டில் நடந்ததை செந்தில் கூறுகிறார். அதை கேட்டு கதிரும் அதிருப்தி அடைய, அவங்களுக்கு தேவை கவர்மெண்ட் மாப்பிள்ளை தானே, நான் கவர்மெண்ட் வேலை பார்க்க செய்யப் போறேன், நானும் படித்து இருக்கிறேன், எக்ஸாம் எழுத போகிறேன் என்று சொல்ல முதலில் கேலி செய்யும் கதிர், அதன் பிறகு வாழ்த்துக்கள் என்று கூறுகிறார்.

ஆனால் இதை யாரிடம் சொல்ல வேண்டாம் என்று செந்தில் கூற, நானும் உன்னிடம் ஒரு விஷயம் சொல்வேன், அதையும் நீ யாரிடமும் சொல்லக்கூடாது’ என்று கூறுகிறார், என்ன என்று செந்தில் கேட்க, சனி ஞாயிறு இரண்டு நாட்களில் ஆக்டிங் டிரைவர் ஆக செல்ல போகிறேன், நான் உன்னுடைய ரகசியத்தை சொல்ல மாட்டேன், என்னுடைய ரகசியத்தை நீ சொல்லக்கூடாது என செந்தில், கதிர் ஆகிய இருவரும் டீல் செய்து கொள்வதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement