• Jan 07 2026

ஏழுமலை ஏழுகடல் திரைப்படம் குறித்து நடிகர் சூரி டுவிட்... வாழ்த்தி தள்ளிய ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டஏழுமலை ஏழுகடல் திரைப்படத்தினை பாராட்டி நடிகர் சூரி இவ்வாறு டுவிட் பதிவிட்டுள்ளார்.


ரோட்டர்டாம் பிலிம்ஃபெஸ்டிவலில் ஏழு கடல் ஏழு மலை - இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது 'V House Productions' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இந்த படத்தின் திரையிடலுக்கு பின்னர் நடிகர் சூரிய இவ்வாறு டுவிட் பதிவிட்டுள்ளார். "உணர்வுகள் கலந்த அழகான அனுபவத்தைத் தரும் காட்சிக் கவிதை. இயக்குநர் ராமின் ஏழுகடல்ஏழுமலை பார்த்து  சர்வதேச பார்வையாளர்கள் மெய்சிலிர்க்கும் ஓர் அனுபவம். பெருமைக்குரிய தருணம்" என பதிவிட்டு வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். அதில் திரைப்படத்தினை பார்த்த அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  


Advertisement

Advertisement