• May 18 2024

கூரையை பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்.. அஜித், சிவகார்த்திகேயன், சிம்பு படங்களில் நடிக்கும் நடிகை..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

ஒரே நேரத்தில் அஜித் ,சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகியோர் படங்களில் நடிக்க பிரபல நடிகை ஒருவர் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் மிருணாள் தாக்கூர். இவரது நடிப்பில் உருவான ’சீதாராமம்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.



அதன் பின்னர் இவருக்கு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று தமிழ் படங்களில் நடிக்க அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், மூன்றுமே பிரபல நடிகர்களின் படங்கள் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ஏகே 63’ சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’எஸ்டிஆர் 48’ மற்றும் சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மிருணாள் தாக்கூர் மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அவர் ஒரு தெலுங்கு மற்றும் ஹிந்தி படத்தில் நடித்து வரும் நிலையில் தமிழிலும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement