தமிழ் சினிமாவில் நடிகர் சூரி தற்போது நகைச்சுவை நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, கதாநாயகன் மற்றும் முக்கிய கதாபாத்திர நடிகராகவும் தனது இடத்தைப் பிடித்து வருகிறார்.
தனது எளிமையான பேச்சு, நேர்மையான கருத்துகள் காரணமாக ரசிகர்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றுள்ள சூரி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் குறித்து கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

செய்தியாளர் சந்திப்பின் போது, பத்திரிகையாளர்கள் சூரியிடம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினர்கள். அதாவது, நடிகர் விஜய்யின் இறுதி படமான “ஜனநாயகன்” மற்றும் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” இந்த இரண்டு படங்களும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, “பராசக்தி” படம், விஜய்யின் “ஜனநாயகன்” படத்திற்கு நேரடி போட்டியாக வெளியாகும் என்ற பேச்சு சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூரியின் கருத்து என்ன என்பதை பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர்.

இந்த கேள்விக்கு நடிகர் சூரி, “யாரும் யாருக்கும் போட்டியெல்லாம் இல்ல. விஜய் அண்ணா, விஜய் அண்ணா தான். SK தம்பி, SK தம்பி தான். ரெண்டு பேருக்கும் மக்களோட சப்போர்ட் இருக்குது. யாரும் யாருக்கும் போட்டியெல்லாம் இல்ல. தம்பியும் இப்ப நல்லா வளர்ந்து கொண்டுவருகிறார்.” என்று பதிலளித்திருந்தார்.
இந்த பதில், ஒரே நேரத்தில் வெளியாகும் பெரிய படங்கள் குறித்து உருவாகும் தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Listen News!