• Apr 17 2026

அன்று முதல் இன்று வரை எவர் கிரீன் Beauty.. சினேகாவின் லேட்டஸ்ட் ஸ்டீல்கள் படுவைரல்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. தனது அழகான புன்னகை, இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, அவரது சிரிப்புக்காகவே ரசிகர்கள் அவரை “புன்னகை அரசி” என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.


தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள சினேகா, குடும்ப பாசம், பெண் உணர்வுகள், காதல், தியாகம் போன்ற கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா, திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி முழுமையாக குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

சினிமாவில் பிஸியாக இருந்த காலத்தை விட, தற்போது குடும்பம், குழந்தைகள், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், ரசிகர்களுடன் உள்ள தொடர்பை அவர் ஒருபோதும் குறைத்துக் கொள்ளவில்லை.


சினேகா மற்ற நடிகைகளைப் போலவே, தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது அழகான புகைப்படங்கள், குடும்பத்துடன் இருக்கும் தருணங்கள், போட்டோ ஷூட் படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “எவர் கிரீன் சினேகா” என்று கமெண்ட்ஸினை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement