தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித் குமார், சினிமாவில் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட ஆர்வங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வருபவர். குறிப்பாக, பைக் ரேஸிங் மற்றும் கார் ரேஸிங் துறைகளில் அவர் கொண்டுள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாகும். நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதும், தன் ஆர்வத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத நடிகராக அஜித் தன்னை நிரூபித்துள்ளார்.

தற்போது, மலேசியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் அஜித் தனது அணியுடன் பங்கேற்று வருகிறார். இந்த போட்டிகளுக்காக அவர் ஒரு வாரத்திற்கு முன்பே மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கார் ரேஸ் போட்டிகளுக்கு இடையே, அஜித் சில விளம்பர படங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விளம்பரங்களுக்கான படப்பிடிப்புகள் தற்போது மலேசியாவிலேயே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இணையத்தில் அஜித் தனது மனைவி ஷாலினியை, கார் ரேஸிற்கு முன் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் “அதே காதல் அப்படியே இருக்கு..! ” என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!