• Jan 19 2025

ஆர்த்தி சந்தேக பேர்வழி.. அம்மாவுக்கு தான் சப்போர்ட்..! ஜெயம் ரவியின் விவாகரத்து பின்னணி?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி தொடர்பிலான விவாகரத்து விடயம் தான் பேசு பொருளாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் விடயங்கள் பற்றி பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், சுஜாதாவின் மகள் தான் ஆர்த்தி. அவர் ஜெயம் ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி பணக்கார பெண் என்பதால் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, பப்புக்கு போவது, அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என ஜாலியான பேர்வழி.

திருமணத்துக்கு பின்னரும் இது தொடர்ந்தது. ஆர்த்தியின்  நடவடிக்கைகள் ஜெயம் ரவிக்கு பிடிக்கவில்லை. ரவி வெளியூர் சென்றாலும் அவரின் உதவியாளரிடம் இப்போது யாருடன் அவர் தங்கி இருக்கின்றார் எனக் கேட்பாராம் ஆர்த்தி. இவ்வாறு மனைவி தன்னை சந்தேகப்படுவது ஜெயம் ரவிக்கு அதிக கோபத்தை ஏற்படுத்திருக்கலாம்.


ஜெயம் ரவி தனது மாமியாரின் வீட்டில் தான் தங்கி இருந்தார். சுஜாதா நல்ல நிர்வாகி. அவர் சின்னத்திரை தொடர்கள் மற்றும் சினிமாக்களை தயாரித்துள்ளார். ரவியை வைத்து ஒரு சில படங்களை தயாரித்தார். அதில் சைரன் படம் மட்டுமே அவருக்கு ஓரளவு லாபத்தை கொடுத்தது.

பாண்டியராஜ் சொன்ன கதை சுஜாதாவுக்கு பிடித்துப் போக ரவியின் சம்பள விவகாரத்தில் பிரச்சனை இருந்தது. அதாவது எனக்கு 20 கோடி சம்பளம் வேண்டும் என ரவி கேட்க, அவ்வளவு  மார்க்கெட் உங்களுக்கு இல்லை என சுஜாதா சொல்லி விட்டாராம். இதனால் பாண்டியராஜிடம் பட்ஜெட்டை குறைக்குமாறு சுஜாதா கேட்க, அவர் அட்வான்ஸையே  திருப்பிக் கொடுத்துவிட்டு விஜய் சேதுபதி இடம் ஓகே செய்து விட்டார்.

இதனால் கோபப்பட்ட ஜெயம் ரவி மாமியாருடன் சண்டை போட இது ஈகோவாக மாறி பிரச்சனையாகி விட்டது. ஆர்த்தி அம்மாவுக்கு சப்போர்ட் செய்ய, இந்த விஷயம் விவாகரத்து வரை போய் உள்ளது. அதனாலயே ரவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்தார் என பயில்வான் மீண்டும் ஒரு சில தகவல்களை சொல்லியுள்ளார்.

Advertisement

Advertisement