• Jan 19 2025

வரலட்சுமியின் மொத்த கல்யாண செலவு எத்தனை கோடி தெரியுமா? அதுல நடந்த நல்ல விஷயம் இது மட்டும் தான்..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் இறுதியாக திருமணத்தில் இணைந்த ஜோடி தான் வரலட்சுமி நிக்கோலாய் சத்தேவ். இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன.

எனினும் வரலட்சுமி தனது திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் தாலி கட்டிய புகைப்படம் என்பவற்றை மிகவும் ரகசியமாகவே வைத்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

வரலட்சுமி திருமணத்திற்கு சாதாரண ஆர்டிஸ்ட் தொடங்கி பிரதமர் மோடி வரைக்கும் பத்திரிகைகளை பார்த்து பார்த்து கொடுத்துள்ளார்கள். இது சரத்குமார் இல்லத்தில் நடந்த முதலாவது திருமணம்.

இந்த நிலையில், பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி திருமணத்திற்கு 80 முதல் 85 கோடி வரை செலவாகி உள்ளதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.


அதன்படி அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திருமண சார்ந்த மொத்த செலவுமே நிக்கோலாய் தான் ஏற்றுள்ளார். அமெரிக்க டாலரில் பத்து மில்லியன் நெட்வொர்க் இருக்குதாம். சுமார் 900 கோடி மதிப்பு இருக்கும். மும்பையில பெரிய ஆர்ட் கேலரி வச்சிருக்கார். அதுல மாதத்திற்கு இரண்டு ஓவியம் விற்றாலே போதுமாம். வீட்டில் சும்மா இருந்து காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம்.

வரலட்சுமியின் கல்யாணத்துக்கு நிறைய செலவுகள் ஆகிவிட்டது. சென்னையில் 7 ஸ்டார் ஹோட்டலுக்கு வரும் பிரபலங்களுக்கு கார் அனுப்பி வரவேற்றுள்ளார்கள். அதுவும் விதவிதமான ஒரே மாநில கார்கள் அணிவகுத்து வந்துள்ளதாம். அந்த கார்கள் ஹோட்டலுக்கு பிரபலங்களை அழைத்து வருவதும் அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்வதுமாக காணப்பட்டுள்ளதாம்.

இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்களாம். இவ்வளவு கார்கள் எங்கிருந்து வந்தது என.. அதையும் தாண்டி சாப்பாடு செலவை பார்த்தால் ஹோட்டலில் குறைந்தபட்சம் சாப்பாடு ஒரு பிளேட் 3000 ரூபாய்.. அதுவும் இது போன்ற கல்யாண விருந்து என்றால் வெளி  மாநில உணவுகள் எல்லாம் வரும். அப்படி பார்க்கும்போது ஒரு பிளேட் சாப்பாட்டுக்கு 6000 தொடக்கம் 6500 வரை இருக்கும்.


இதுல நடந்த நல்ல விஷயம் என்னவென்றால் மீதமான உணவுகளை ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். வரலட்சுமி சிவசக்தி என்ற ஒரு அமைப்பை வைத்துள்ளார்.

எனினும், ஹோட்டலில் மிஞ்சிய உணவை அவர்களுக்கு  அனுப்ப வேண்டாம். அதற்கு பதிலாக இதே ஸ்டார் ஹோட்டல்ல இருந்து அவங்களுக்கும் சுடச்சுட உணவுகளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளாராம் வரலட்சுமி.  அதன்படியே சில அமைப்புகளுக்கும் அனுப்பி உள்ளார்களாம். இது வரவேற்கத்தக்க விடயம். பெரிய புண்ணியம் கிடைக்கும் என கூறியுள்ளார் செய்யாறு பாலு.

Advertisement

Advertisement