• Jan 19 2025

மலேசியாவில் இந்தியன் - 2 வின் விநியோக உரிமையை பெற்ற பெரும் நிறுவனம்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

ஊழலுக்கு எதிராகப் போராடும் வயதான சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் உலக நாயகனின் இந்தியன் - 2 இயக்குனர் சங்கர் இயக்கத்திலும் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பிலும் வெளிவர இருக்கிறது.

Image

திரையிடலுக்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா வெகு கோலகலமாக நடைபெற்று படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

Image

வரும் ஜூலை 12 ஆம் திகதி உலகெங்கும் வெளிவர இருக்கும் இந்தியன் - 2 படத்தின் விநியோக உரிமை வழங்கப்பட்டு வரும் இந்நிலையில் மலேசியாவில் இந்தியன் - 2 வின் விநியோக உரிமையை புகழ் பெற்ற பெரும் நிறுவனமான த்ரீ டொட் மூவிஸ் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.



Advertisement

Advertisement