• Jan 18 2025

விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி படத்தில் களமிறங்கும் யூடியூப் பிரபலம் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 6 வது தமிழ் திரைப்படமான எல்.ஐ.சி என சுருக்கத்தை கொண்ட லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

Vignesh Shivan conducts workshop with Pradeep and SJ Suryah for 'LIC' |  Tamil Movie News - Times of India

சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இறுதியில் பிரதீப் ரங்கநாதன் ,எஸ்.ஜே.சூர்யா மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவுடன் பலரும் நடித்து வரும் நிலையில் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


நகைச்சுவை முக்கிய பங்கெடுக்கும் இப் படத்தில் யூடியூப் பிரபலமான காத்து கருப்பு கலை முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் எதிர்பார்க்கும் இப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


Advertisement

Advertisement