தமிழ் சினிமாவில் காதல், குடும்பம் மற்றும் யதார்த்த வாழ்க்கை வரிசைகளில் எப்போதும் முக்கிய இடம் பிடித்துக் கொண்டிருப்பவை மனித உறவுகள். அந்த வகையில், இயக்குநர் கே. ரங்கராஜ் இயக்கியுள்ள ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படம் நடுத்தர வாழ்வின் உண்மையான காதல் மற்றும் அதனுடன் வரும் மோதல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் கதைக்களம் ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் காதல் ஜோடியை சுற்றி சுழல்கின்றது. ஸ்ரீகாந்த் மற்றும் பூஜிதா ஆகியோர் இதில் ஜோடியாக நடித்துள்ளனர். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் சிறியளவில் உயர்வடைய விரும்புவதாக இப்படம் அமைந்துள்ளது.
ஸ்ரீகாந்த், தன்னுடைய இயல்பான நடிப்பால் நடுத்தர குடும்ப இளைஞனின் ஆசைகள் மற்றும் குழப்பங்களைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றார். மேலும் படத்தைப் பார்த்த அனைவரும் இப்படத்தில் எதிர்பாராத காதல் உணர்வு காணப்படுவதாகக் கூறியுள்ளனர்.
அத்துடன் 90களின் பாரம்பரிய காதல் திரைப்படங்களை நினைவுபடுத்தும் வகையில் கதையை நகர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். சிலர் கதை சொல்லும் முறை சற்று பழையது போன்று தோன்றினாலும், அதனை இன்றைய சமூக சூழ்நிலைக்கு பொருந்தும் விதமாக படத்தை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Listen News!