• Apr 02 2025

என் குடும்பத்தை அசிங்கப்படுத்தலாமே தவிர உங்களுக்கு வேறு பலன் இல்லை!விசாரணைக்கு தயாரான இயக்குநர் அமீர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக் குற்றச் செயல்களில் தொடர்புபட்டுள்ளதாக போலீஸார் அவரை தேடி வருகின்றனர். 

இயக்குநர் அமீர் ஜாபர் சாதிக்குடன் மிகவும் நெருங்கி பழகிய ஒருவர். இதனால் அவர்கள் இருவரையும் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் கிளம்பியது.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது மீண்டும் தெளிவாக வீடியோ மூலம் அமீர் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


என்னுடைய 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் குற்றச்செயலோடு என்னை தொடர்புபடுத்தி சமூகவலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது.

இது போன்ற குற்றச் செயலில் நீங்கள் என்னை தொடர்புபடுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் கலங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்துவிட முடியாது

இது குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement