• Jan 18 2025

யார் வருவாங்க யார் போவாங்க எல்லாமே உங்களுக்கு தெரியும்- விஷ்ணுவை கலாய்த் கமல்ஹாசன்- Bigg Boss Promo 1

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இரண்டு வீடுகளைக் கொண்ட இந்த 7வது சீசன் பிக்பாஸ் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கிவிட்டது. மொத்தம் 18 பேர் கொண்ட இந்த சீசனில் மக்களுக்கு அதிகம் பரீட்சயமான பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் இன்றுடன் நிகழ்ச்சி ஆரம்பித்து 49 நாட்களை கடந்து விட்டது என்கின்றார்.

மேலும் விஷ்ணுவை எழுப்பி அனைத்தும் தெரிந்தவர் நீங்க தான் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு போவாங்க என்று நினைக்கிறீங்க என்று கேட்கின்றார். அதற்கு விஷ்ணு அக்ஷயா என்று சொல்ல, புள்ளி விபரத்தை அப்பிடியே கரெக்டாக சொல்லியிருக்கிறீங்க என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement