• Jan 19 2025

பிக் பாஸ் நிக்சனுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்! இது தப்பாவே தோணலையா? கமல் வைத்த ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

நிக்சன் பிக் பாஸ் வீட்டில் நடிகை வினுஷா பற்றி மிகவும் மோசமாக பேசி இருந்தது சர்ச்சை ஆகி இருந்தது. அதற்கு நடிகை வினுஷாவும் பதிலடியான பதில் ஒன்றை கொடுத்து இருந்தார். எனினும், நிக்சன் பற்றி கமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நிக்சன் விசித்திராவிடம் தன்னை மரியாதையாக சார் என்று அழைக்கும் படி கூறியது பற்றி கமல் விசாரிக்கிறார். கூடவே தான் அப்படி சொன்னது ஞாபகம் இல்ல சார் என்று நிக்சன் சொல்ல, அதை நாங்கள் பார்த்தோம் என்று கமல் கூறி இருக்கிறார். எனினும் அவருக்கு எந்த தண்டனையும் கொடுத்தாக தெரியவில்லை.


அதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகளும் பெரியவர்களும் பார்க்கும் நிலையில் கடந்த நாட்களில் நிக்சன் மற்றும் ஐசு இருவரும் முத்தக்காட்சிகளில் ஈடுபட்ட போது கூட அது குறித்து கமல் கேள்வி எழுப்பவில்லை. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறான நிலையில் நேற்று விசித்ராவிற்க்கு ஆதரவாக நிக்சனிடம் கமல் கேள்வி கேட்டு இருக்கிறார். மேலும், ஐஷு  வெளியேறுவதற்கு காரணம் நிக்சன் தான் என்று  ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அது குறித்து அர்ச்சனா, நிக்சனிடம் நேரடியாகவே சொல்லி இருந்தார்.


அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் உங்களுக்கு இது தப்பாவே தோணலையா? என்றும் நிக்சனிடம் கேள்வி கேட்டிருக்கிறார். எனினும், வினுஷா விஷயத்தில்  சொதப்பியதை இந்த வாரம் சரி பண்ண பார்க்கிறாரா? என்று ரசிகர்கள்  கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டிலுள்ள பெண்கள் விஷயத்தில் நிக்சன் தொடர்ந்தும் தரக்குறைவாக பேசுகின்றமைக்கு பெரும் எதிர்ப்பு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement