பிக்பாஸ் தமிழ்7 போட்டியாளர்களில் நடிகர் விஷ்ணு விஜய்யும் ஒருவர். அவரது தொழில், வாழ்க்கை முதல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் பட்ட அவமானங்கள், எதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்தார் என விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஷ்ணு விஜய் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர்களில் ஒருவர் . திரைப்படங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, விஷ்ணு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு சிறந்த முத்திரையைப் பதித்தவர்.
விஷ்ணு விஜய், ஹேமலதா, மோனிஷா ரவிசங்கர் , யுதன் பாலாஜி மற்றும் இர்ஃபான் ஆகியோருடன் நடித்த பிரபலமான தமிழ் சீரியல் தான் 'கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை' . இதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் .
ஆனால், ‘ஆபிஸ்’ சீரியலில் நடித்த விஷ்ணுவின் கதாபாத்திரம் அவருக்கு தமிழில் பெரிய பிரேக் கொடுத்தது. அந்த சீரியலில் அவரது அழகான ஹீரோ அவதாரங்கள் பல மில்லியன் இதயங்களைக் கொள்ளையடித்தன.
இதை தொடர்ந்து, சத்யா சீசன் 1, 2, இது சொல்ல மறந்த கதை , அலுவலகம் போன்ற சீரியல்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
மேலும், நடிகர்கள் விமல் , அஞ்சலி மற்றும் சூரி ஆகியோருடன் 'மாப்ள சிங்கம்' படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் . இவன் யாரென்று தெரிகிறதா, 6 அதியாயம், களரி, கொரில்லா, சிவப்பு செவல் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பின்னர், சமையல் ரியாலிட்டி ஷோ கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 3 இல் ஒரு போட்டியாளராக பங்கேற்றார், அங்கு அவர் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 7 பங்கேற்று, அதில் முதல் பைனலிஸ்ட்டாக தேர்வான விஷ்ணு, எதற்காக இத்தனை போராடி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, விஷ்ணுவை வளர்த்தது அவர் சித்தப்பா தானாம். அவருக்காகவே கல்யாணமே செய்துக்கொள்ளாமல் இருந்தவர். மீடியா துறையை எடுக்கும் போது குடும்பமே எதிர்க்க அவர் சித்தப்பா தான் துணை நிற்கிறார்.ஷூட்டிங் ஒரு நாள் சென்றால் 750 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுப்பார்களாம். இதை தொடர்ந்து அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வர அப்படம் பெரிய அளவில் ரீச் தரவில்லை.
அவருடன் விஜய் டிவியில் வேலை செய்த பிரபலம் ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் நடிகராகி விட்டார். அவர் விஷ்ணுவை வெகுவாக அவமானப்படுத்தினாராம். உனக்கெல்லாம் நடிக்கவே தெரியாது. அமுல் பேபி மாதிரி இருக்க எனச் சொல்லி விஷ்ணுவை காயப்படுத்தி இருக்கிறார். அந்த அவமானத்தை தனக்குள் எடுத்துக்கொண்ட விஷ்ணு இதற்காகவே கடுமையாக உழைத்தார். அந்த ஹீரோக்கு முன்னால் உயர வேண்டும் என்பதற்காகவே தான் கடந்த மூன்று சீசன்களாக போராடி இந்த சீசனின் வாய்ப்பை பெற்றாராம்.
38 வயதாகும் விஷ்ணு திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பதற்கு சினிமா மட்டுமே காரணம் இல்லையாம். அவரின் அக்கா இருவரையும் கல்யாணம் செய்ய கொடுக்க வேண்டும். ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இன்னொரு அக்கா பொறுப்பும் முடியவேண்டும். வீடு எடுத்திருக்கேன். அதுக்கான பொறுப்பும் இருப்பதாக நண்பர்களிடம் சொல்லுவாராம்.
இத்தனை போராட்டங்களுக்கு இடையே உள்ளே வந்த விஷ்ணு டிக்கெட் டூ ஃபினாலேவில் வென்று அந்த டிக்கெட்டை பெற்று முதல் பைனலிஸ்ட்டாக தேர்வானார். ஆனாலும் கூட கடைசி மேடை ஏறாமல் விஷ்ணு வெள்ளிக்கிழமையான இன்று வெளியேறிவிட்டார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது.
Listen News!