• Feb 09 2026

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ‘Slum Dog – 33 Temple Road’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, இன்று (ஜனவரி 16) தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு ‘Slum Dog – 33 Temple Road’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இப்படத்தை இயக்குகிறார். இதன் மூலம் விஜய் சேதுபதி – பூரி ஜெகன்னாத் கூட்டணி முதல் முறையாக இணைகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பிச்சைக்காரராகவும், அதே நேரத்தில் மிகவும் ஆக்ரோஷமான, இரக்கமற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நடிப்பில் இதுவரை காணாத புதிய பரிமாணம் இந்த படத்தில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தில் நாயகியாக சம்யுக்தா நடிக்க, முக்கிய வேடங்களில் தபு, விஜய் குமார், பிரம்மாஜி மற்றும் வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.

பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

தற்போது வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் சேதுபதி ரத்தம் படிந்த கத்தியுடன், பணக்கட்டுகள் நிறைந்த பெட்டிகளுக்கு நடுவே ஸ்டைலான மற்றும் அதிரடி தோற்றத்தில் நிற்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூடுதல் அப்டேட்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement