சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக இப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட்டில் முழு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன், அமரன், மதராஸி, பராசக்தி போன்ற படங்களில் ஆக்ஷன் மையமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் ரசிகர்களிம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறிய கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த கூட்டணி முழு நீள திரைப்படமாக உருவாக உள்ளது.

அதன்படி ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், சமீப காலமாக நான் அதிகம் சீரியஸான படங்களில் நடித்துவிட்டேன். அதனால் அடுத்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.. என்று தெரிவித்துள்ளார்.
சென்னை 28, கோவா போன்ற நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, இந்த படத்திலும் சிவகார்த்திகேயனின் நகைச்சுவை திறனை முழுமையாக வெளிக்காட்டும் வகையில் கதையை அமைப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!