• Jan 15 2026

சென்சார் சர்ச்சை நடுவே… ‘ஜனநாயகன்’ குறித்து ஒளிப்பதிவாளர் வெளியிட்ட பதிவு வைரல்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகும் தனது புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராக இருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். 

முதலில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக இருந்த இந்த படம், விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய பிரச்சினையால் படத்தின் வெளியீடு திடீரென தள்ளிப்போனது.


‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்காததே ரிலீஸ் தள்ளிப்போனதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்த விவகாரம், சினிமா வட்டாரங்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை வெளிப்படையாக பேசும் திரைப்படங்களுக்கு சென்சார் சிக்கல்கள் வருவது புதிதல்ல என்றாலும், விஜய் நடித்த படம் என்பதால் இந்த விவகாரம் கூடுதல் கவனம் பெற்றது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தில், விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து, முன்னணி நடிகை பூஜா ஹெட்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக தற்போது ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்ட ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது சமூக வலைத்தள பதிவில்,“Where does the truth lie.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement