மலையாள திரையுலகில் வித்தியாசமான முயற்சிகளுடன் படங்களை உருவாக்கும் இயக்குனர் நிதிஷ் சகாதேவ், புதிய திரைப்படமான ‘தலைவர் தம்பி’ மூலம் தமிழிலும் திரைப்பட ரசிகர்களை கவர முயற்சித்துள்ளார். இந்த படம் இன்று வெளியானது, மேலும் தொடக்கத்திலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தின் முக்கிய அம்சம் ஜீவா கதாநாயகனாக நடிப்பது. ஜீவா தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளார். துணை கதாப்பாத்திரமாக தம்பி ராமைய்யா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பு, கதையின் சீரான பாய்ச்சலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

‘தலைவர் தம்பி’ படத்தின் கதை சாதாரணமாக இல்லாமல், குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் காதல் சம்பவங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் முதல் பாதி முழுமையாக விறுவிறுப்பாகவும், நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கின்றது.
இந்நிலையில், இப்படத்தினைப் பார்த்த ஒரு விமர்சகர் தனது கருத்தில், "இந்தப் படத்தின் முதல் பாதி செம ஃபன். இரண்டாம் பாதி குட். தலைவர் தம்பி தலைமையில் தான் பொங்கல் வின்னர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ரசிகர், "தலைவர் தம்பி தலைமையில் 2026ஆம் ஆண்டை ஜீவாவுக்கு நல்லவிதமாக தொடங்கி வைத்திருக்கிறது. யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் அன்லிமிட்டெடாக ஹியூமரை கொடுக்கிறது. தம்பி ராமைய்யா, ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இந்தப் படம் க்ளீன் என்ட்டெர்டெயினர். கண்டிப்பாக பொங்கல் வின்னர்." என்று கூறியுள்ளார்.
இந்த விமர்சனங்கள், படத்தை பார்த்தவர்களின் பாசிட்டிவ் ரிப்ப்ளைஸ் மற்றும் பாராட்டுகளை நன்றாக பிரதிபலிக்கின்றன.
Listen News!