• Jan 15 2026

‘வா வாத்தியார்’ வருகையால் டல் அடித்த 'பராசக்தி'.. வெளியான வசூல் விபரம் இதோ.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் களத்தில் தற்போது பரபரப்பான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வா வாத்தியார்’ நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாளிலிருந்தே இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில், கடந்த 10ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படமான ‘பராசக்தி’ பாக்ஸ் ஆஃபிஸில் சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தது. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது வரை 50 கோடிகளுக்கு மேலாக வசூலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக கருத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், சிவகார்த்திகேயனின் நடிப்பால் கூடுதல் கவனம் பெற்றது.


ஆனால், நேற்றைய தினம் ‘வா வாத்தியார்’ படம் வெளியானதைத் தொடர்ந்து, ‘பராசக்தி’ படத்தின் வசூலில் சற்று மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முக்கிய நகரங்களில் பல திரையரங்குகளில் ‘வா வாத்தியார்’ படத்திற்கான கூட்டம் அதிகரித்துள்ளதால், ‘பராசக்தி’ படத்தின் ஷோக்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இதுவரை நல்ல வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த ‘பராசக்தி’ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆஃபிஸில் டல் அடித்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement