தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான கதைக்களங்களையும், சமூக கருத்துக்களையும் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பராசக்தி’, கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படம், வெளியானதும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘பராசக்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளில் அமோக வசூலை குவித்தது. குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் படம் மீது வைத்திருந்த நம்பிக்கையால், முதல் நாள் திரையரங்குகள் நிரம்பி வழிந்தன.
ஆனால், படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் கலவையானதாக இருந்தது. இதன் காரணமாக, முதல் நாள் வசூலுக்குப் பிறகு, படத்தின் வசூல் சற்று மந்தமாக காணப்பட்டது. இருப்பினும், படம் பேசப்படும் படமாகவே தொடர்ந்து இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ‘பராசக்தி’ திரைப்படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2026-க்கு தேர்வாகியுள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Listen News!