தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் தொடங்கிய நாளிலிருந்து பல திருப்பங்களும், சண்டைகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளன.
தற்போது இந்த சீசனில் சபரி, திவ்யா, விக்ரம் மற்றும் அரோரா ஆகிய நான்கு போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் பரபரப்புக்கு மேலும் தீனி போடும் வகையில் பழைய போட்டியாளர்கள் கெஸ்ட் ஆக உள்ளே வருகை தந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட் ஆக வருவதால், பழைய நினைவுகள், கடந்த சண்டைகள், பேசப்படாத விஷயங்கள் என அனைத்தும் மீண்டும் பேசப்படுவதால், ரசிகர்களுக்கும் கூடுதல் ரசனை கிடைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், பிக் பாஸ் சீசன் 9-ல் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அதாவது, இந்த சீசனில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரான அமித், பிக் பாஸ் வீட்டில் இருந்த நாட்களில் பெற்ற சம்பளம் குறித்த தகவல் கிடைத்துள்ளன.
வெளியான தகவல்களின் படி, அமித் ஒருநாளுக்கு ரூ.20,000 சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் மொத்தமாக 55 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியுள்ளார். அந்த அடிப்படையில் கணக்கிடும் போது, ரூ.11,00,000 சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!