தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான இளைய தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் சென்சார் போர்ட் பிரச்சனையால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது.
இந்த நிலையில், மலேசியாவில் தமிழ் திரை உலகின் விளம்பரதாரராக இருந்து வரும் அப்துல் மாலிக் தஸ்திகீரின் புதுமனை புது விழாவில் கலந்துகொண்ட நடிகரும் தவேக கட்சியின் தலைவருமான விஜய் அதில் பங்கேற்று, புதிய வீட்டை திறந்து வைத்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மேலும் அவருடைய குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடுவதுடன், குழந்தைகளுடனும் மனைவியுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அது மட்டும் இன்றி அவருக்கு அப்துல் மாலிக் கன்னத்தில் முத்தமிட்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்களுடைய வைரலாகி வருகிறது.

விஜயின் தீவிர ரசிகரான அப்துல் மாலிக் தான் மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!