தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் திறமையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம், 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த சூழ்நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசிய சில கருத்துகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. குறிப்பாக சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த “மாநாடு” படம் குறித்தும் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

சிவகார்த்திகேயன் அதன்போது, “மாநாடு படம் முதல் செடியூல்ட் முடிச்சிட்டு நிறுத்திட்டாங்க. பின்னர் அந்தப் படத்தை என்னை வைத்து தொடரலாம் என்று சொன்னார்கள். அதற்கு நான், இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும். கண்டிப்பாக இதை சிம்பு சாரை வச்சுத் தான் தொடரணும் என்று சொன்னேன்.” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!