பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இந்த வாரத்துடன் நிறைவுக்கு வர உள்ளது. இந்த சீசனின் 103 வது நாளில் தற்போது கலகலப்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான கவின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதன்போது அவர்கள் பங்கெடுத்த சீசனில் எப்படி நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் இருந்தார்களோ அதைப்போலவே தற்போதும் இருப்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதன்படி முதலாவதாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாண்டி மாஸ்டர், கவின் நுழையும்போது அவரை அமோகமாக வரவேற்கின்றார்.
அதற்கு பிறகு வீட்டிற்குள் வந்த கவின் வினோத்தை கட்டி அணைக்க, ரெண்டு பெட்டியும் பேசிக்குது பாத்தியா என பிக் பாஸ் கமெண்ட்ஸ் அடித்தார்.

இதை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில், இந்த இடத்தை தவிர வேறு எங்க சொன்னா சந்தோஷமாக இருக்கும் என்று தெரியல என கூறிய கவின், நானும் சாண்டி மாஸ்டரும் ஒரு படம் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய கைகளை தட்டி பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். அதற்குப்பின் அவர்கள் போட்டியாளர்களுடன் ஆடிப் பாடிய காட்சியும் பதிவாகியுள்ளது.
Listen News!