• Jan 15 2026

என் ஓட்டு பலூன் அக்காவுக்கு; அவங்க டைட்டில் ஜெயிச்சிட்டு பலூன் சோ காட்டுவாங்க!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் ஒன்பதாவது சீசன் கடந்த அக்டோபரில் தொடங்கி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் இறுதிக் கட்டத்தில் உள்ள நான்கு போட்டியாளர்களுக்கிடையில் வாக்கு சேகரிப்பு மிக அதிக உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் பார்வதி, கமரூதீன், சபரி, கானா வினோத் ஆகியோர் டைட்டிலுக்குப் போட்டியிட்டனர். பார்வதி கடுமையான போட்டியாளராக இருந்த போதும், எதிர்பாராத விதமாக பார்வதி மற்றும் கமரூதீனுக்கு ரெட் கார்டுகள் வழங்கப்பட்டன. 

இதனால் பலருக்குக் கானா வினோத் தான் வெற்றி பெறுவார் என்று எண்ணப்பட்டார். ஆனால் குடும்ப காரணங்களால் கானா வினோத் 18 லட்சம் பணப் பெட்டியுடன் வெளியேறினார், இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில், பிரபல நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் கூல் சுரேஷ், சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, தனது ஓட்டு பலூன் அக்காவுக்கு என்று தெரிவித்துள்ளார். 


அதில் அவர் கூறியது, எனது ஓட்டு பலூன் அக்காவுக்கு தான்.. பலூன் அக்கா ஜெயித்ததற்கு பிறகு என்ன மாதிரி இளசுகளுக்கும் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் பழசுகளுக்கும் மனசுக்கு இதமாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் பலூன் ஷோ காட்டுவாங்க.. 

மத்தவங்க டைட்டிலை வென்றால் வீடு கட்டணும், கார் வாங்கணும் என்று சொல்வார்கள். ஆனால் பலூன் அக்கா ஏகப்பட்ட பலூங்களை வாங்கி நம்மை போன்ற இளைஞர்களை சந்தோஷப்படுத்துவாங்க.. என்னுடைய ஓட்டு பலூன் அக்காவுக்கு தான்  என்று பேசியுள்ளார்.. 

இதை பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும்  ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸில்  அரோரா கலந்து கொள்ளும் போது  அவர் தனது பெயரை மாற்றுவதற்காக தான் என்ட்ரி கொடுத்தார் என பேசப்பட்டது. அதன்படியே தற்போது பாசிட்டிவான விமர்சனங்களை அரோரா பெற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி உள்ளார்.

இவ்வாறான நிலையில் தற்போது கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.  இதனால் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement