சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் ரோகிணியை மறக்க முடியாமல் குடித்துவிட்டு வீதியில் வரும் போது போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றார்.
அதில் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிலின் பெயர் ரோகிணி என்று கூற, அவருக்கு இரண்டு புருஷன் என்று அவரை அசிங்கப்படுத்துகிறார். இதனால் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி அழ, மனோஜை அள்ளிச் செல்ல தயாராகின்றனர்.
அந்த நேரத்தில் முத்து அங்கு வந்து மனோஜ் வாழ்க்கையில் நடந்தவற்றை சொல்லி, மனோஜை காப்பாற்றி செல்கின்றார்.
இன்னொரு பக்கம் சிந்தாமணி விஜயா வீட்டிற்கு வந்து அவரை கட்டிப்பிடித்து அழுகின்றார். மேலும் ரோகிணி இப்படி செய்து இருக்கக் கூடாது என அவருக்கு எதிராக கதைக்கின்றார்.

இதன் போது அங்கு வந்த ரோகிணி தன்னுடைய துணிமணிகளை மட்டும் தருமாறு கெஞ்சுகின்றார். ஆனாலும் தரமாட்டேன் என்ற முதலில் சொல்லிய விஜயா, அவற்றை தூக்கி வெளியே வீசுவதாக சொல்ல, மீனா வேண்டாம் அதனை ரோகிணியே வந்து எடுத்து செல்லட்டும் என்று கூறுகின்றார்.
ஆனாலும் விஜயா அவற்றை தூக்கி எறிகின்றார். இவற்றையெல்லாம் சிந்தாமணி தன்னுடைய கை தொலைபேசியில் வீடியோ எடுக்கின்றார்.
அந்த நேரத்தில் மனோஜ் அங்கு வர, ரோகிணி எதற்காக இங்கே வந்தார் என குழம்புகிறார். மேலும் மனோஜின் கோலத்தை பார்த்து விஜயா அழுகின்றார்.
ஆனாலும் மனோஜ் குடிக்க ஆரம்பித்து விட்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்துவேன் என ரோகிணி திட்டமிடுகின்றார். இறுதியாக ரோகிணி துணி எடுப்பதற்காக மட்டும் வரவில்லை இதில் ஏதோ சதி இருப்பதாக மீனா சந்தேகப்படுகின்றார்.
Listen News!