• Jan 16 2026

அப்போ அத்தனையும் டூப்பா சைத்ரா ரெட்டி? கயல் விபத்து காட்சியில் ரிஸ்க் எடுத்தது யார் தெரியுமா? ஷாக் போட்டோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் கயல் சீரியல். இந்த சீரியல் தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது.

சன் டிவியில் முதலிடத்தில் இருந்து வந்த அந்த சீரியல் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, சிங்கப்பெண்ணே சீரியல் தான் முதலிடத்தில் இருக்கிறது.


சமீபத்தில் கயல் சீரியலில் வில்லன் காரை வைத்து கயலை இடித்து தள்ளுவது போன்ற காட்சி வெளியானது. இதில் கயல் சீரியல் நடிகை அனுபவிக்கும் வலிகளை அப்படியே வீடியோவாக வெளியிட்டு, ரசிகர்களை வெகுவாக கட்டிப்போட்டு இருந்தனர். குறித்த விபத்து காட்சி ராஜா ராணி படத்தில் வருவது போலவே எடுத்து இருந்தனர்.


இந்த நிலையில், அந்த விபத்து காட்சியில் கயலுக்கு டூப் போட்ட நபரின் வீடியோவை நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement