• Jan 16 2026

விஜய் தேவரகொண்டாவின் தாய் இவரா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரை உலகில் "நுவ்விள" என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது தமிழ்  மொழி படங்களிலும் முக்கிய இடத்தை  பெற்றுள்ளார். 

அதன்படி  2018 ஆம் ஆண்டு வெளியான மகாநதி, நோட்டா என்ற  தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இதனால் தமிழிலும் முன்னணி நாயகனாக கருதப்பட்டார்.  

அர்ஜுன் ரெட்டி மற்றும் மகாநதி போன்ற படங்களில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் கீதாகோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து  இந்திய அளவில் பிரபலமானார். 


இறுதியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம்  வெளியானது. ஆனால் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  பின்னடைவை சந்தித்தது. 

இன்னொரு பக்கம் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம்  அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் பொங்கல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதன்போது தனது தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Advertisement

Advertisement